பெண்களை ஆபாசமாக தூற்றும் தேசியவாத பாடகர்?

0

சென்னை சுவாதி கொலைவழக்கில் ராம் குமார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பிலால் மாலிக் என்பவர் தான் கொலையாளி என்றும் இது லவ் ஜிஹாதினால் ஏற்பட்ட கொலை என்றும் ஃபாசிசவாதிகள் பொய்களை பரப்பிக் கொண்டு இருந்தனர். அது போன்று முன்னாள் பாடகரான அபிஜீத் என்பவரும் அவரது பங்கிற்கு இந்து லவ் ஜிஹாதால் ஏற்பட்ட கொலை என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்தார்.
அபிஜீதின் இந்த பதிவு ஒரு கொலையை மத மோதலாக மாற்றும் என்று உணர்ந்த பத்திரிகையாளரான சுவாதி சதுர்வேதி அவரது பதிவுக்கு மறுப்பு தெரிவிக்கவே அவரை நோக்கி ஆபாசமான கருத்துகளை வீசினார் அபிஜீத். சுவாதி யோடு நிறுத்திக்கொள்ளாமல் ஜந்தா கா ரிப்போர்டர் என்ற செய்தி தளத்தின் ஆசிரியரான ரிஃபாத் ஜாவைத் -ஐ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜன்ட் என்று வசை பாடினார் அபிஜீத்.

அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க மும்பை காவல்துறையிடம் கேட்டுக்கொண்ட போது டில்லி காவல்துறைஇடம் புகாரளிக்குமாரும் அங்கிருந்து துறை ரீதியாக மும்பை காவல்துறைக்கு அது மாற்றப்படும் என்ற காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் அவர் மீது புகாரளிக்கவே டில்லி காவல்துறை வேண்டா வெறுப்பாக புகாரை பதிவு செய்துள்ளது. மும்பை காவல்துறையோ அவர்களுக்கு ஏழு கடிதங்கள் எழுதப்பட்டும் அவ்வழக்கை மும்பைக்கு மாற்ற மறுத்துள்ளது. இன்னும் அவ்வழக்கு குறித்து விசாரணை செய்யவோ அலல்து நடவடிக்கை எடுக்கவோ இல்லை. புகாரளித்தவரின் வாக்குமூலத்தையும் மும்பை காவல்துறை கேட்கவில்லை என்று தெரிகிறது.

இவை அனைத்தும் மத்திய பெண்கள் மற்றும் சிறுவர்கள் முன்னேற்றத் துறை அமைச்சர் மேனகா காந்தி இணையதளத்தில் துன்புறுத்தப்படும் பெண்களுக்கான பிரத்யேக உதவி மையத்தை நிறுவிய பிறகும் நடக்கும் அவலங்கள். அபிஜீதிற்கு எதிராக மேனகா காந்தி களம் நடவடிக்கை எடுக்க முன்வரவே அவரையும் விட்டு வைக்கவில்லை இணையதள ஃபாசிச குண்டர்கள்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதியை தேசிய தொலைகாட்சி ஒன்றில் வைத்து மீண்டும் மிரட்டியுள்ளார் அபிஜீத். இறுதியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் ப்ரீத்தி ஷர்மா மேனன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அபிஜீத் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் பா.ஜ.க விற்கு நெருக்கமானவர் என்பதால் இவர் மீது வழக்கு பதிவு செய்ய டில்லி காவல்துறை தயக்கம் காட்டியது என்று கூறப்படுகிறது. தனது கைதிற்குப் பிறகு, பாலிவுட்டில் தேசியவாதியாக இருப்பதால் அதற்கான விலையை தான் கொடுக்க நேர்ந்துள்ளது” என்று அபிஜீத் கூறியுள்ளார்.

Comments are closed.