பெண்கள் தலைமையில் முன்னேற்றம்…?

0

கர்நாடகத்துக்குப் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு பா.ஜ.க. மகளிர் அணியினரிடையே பேசும்போது, ‘பெண்கள் முன்னேற்றம்’ என்ற நிலையில் இருந்து இப்போது, ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்’ என்ற அளவில் நாடு முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் ‘முதலில் பெண்கள் என்பதுதான் மந்திரம்’ என்று கூறியதோடு, சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவை வெளியிட்டார். அதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். பூரித்துப் போனார்கள் பா.ஜ.க.வினர். மகளிரைக் காக்க வந்த ரட்சகனாக பா.ஜ.க.வை சித்தரிப்பதற்கான முயற்சி இது. உலகின் 15 நாடுகளுக்கு தற்போது பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர். அவர்களில் எட்டுப் பேர் தங்கள் நாட்டின் முதல் பெண் தலைவர்கள் ஆவார்கள் என்று பியூ ரிசர்ச் சென்டர் என்னும் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. எனவே, இரண்டு மத்திய பெண் அமைச்சர்கள் படங்களைக் காண்பித்து பீற்றிக்கொள்வதற்கு ஏதுமில்லை.

இந்த தேசத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அன்றாடம் பதறவைக்கும் செய்திகள் மூலம் அறிந்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன் வெளியான 2016-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (நேஷனல் கிரைம் ரிக்கார்ட் பீரோ) அறிக்கைப்படி தேசிய அளவில் பல்வேறு வகைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3.38 லட்சத்துக்கும் அதிகம். இது அதற்கு முந்தையை ஆண்டைவிட 2.9 சதவிகிதம் கூடுதல். இதில் பாலியல் துன்புறுத்தல் 84 ஆயிரத்து 746. பாலியல் வன்முறை (ரேப்) 38 ஆயிரத்து 947. இதில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. 2016இல் காணாமல் போன பெண்கள் 3.14 லட்சம் பேர். இந்த நிலையில்தான் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்’ என்கிறார் பிரதமர். வேலைவாய்ப்பிலும் பொருளாதார ரீதியிலும் பெண்கள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்பது எப்படி சாத்தியமாகும்?

வேலைவாய்ப்பு

பொதுவாக நம்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. ரயில்வே துறையில் ஒரு லட்சம் பணிகளுக்கு, 3 கோடி பேருக்குமேல் விண்ணப்பித்துள்ளனர். அதற்கும் மேலாக அண்மையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 351 அரசுப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்- 4 தேர்வு நடந்தது. 17 லட்சத்து 52 ஆயிரத்து 804 பேர் தேர்வு எழுதினர். இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் ஆண்களைவிட, பெண்களே அதிகம். இந்த பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் விண்ணப்பம் செய்தவர்களில் 992 பேர் பி.எச்டி. பட்டமும், 23 ஆயிரம் பேர் எம்.பில். பட்டமும், 2.5 லட்சம் பேர் முதுகலை பட்டமும் பெற்றவர்கள். இதுதவிர, பொறியியல் படித்தவர்களும் ஏராளம். இதே நிலைதான் தேசமெங்கும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.