பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது!

0

ராமநகரா மாவட்டம் கொடிகெஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜம்மா என்ற பெண்ணை ஊர் வாசிகள் மின் கம்பத்தில் கட்டிவைத்து அவரை கொடுமை செய்துள்ளனர். ராஜம்மா ஒரு  உணவகம் நடத்துவதற்காக 12 லட்சம் ரூபாய் வரை பலரிடம் கடன் பெற்றதாகவும் நஷ்டம் காரணமாக கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தர்மசாலாவில் இருந்த ராஜம்மாவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த ஊர்மக்களில் சிலர் அவரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர். அவரை தாக்கியதன் காரணமாக 7 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர். வருகின்றனர்.

Comments are closed.