பெனாசீர் பூட்டோவின் கணவரும் முன்னாள் அதிபருமான ஆசிஃப் அலி சர்தாரி கைது

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரும் முன்னாள் அதிபருமான ஆசிஃப் அலி சர்தாரி, போலி வங்கி கணக்குகள் தொடங்கி வெளிநாட்டுக்கு பணம் அனுப்பி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்பாக ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் பாகிஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அவர் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், அவரை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply