பெரியார் சிலையின் மண்டை உடைப்பு! ஸ்டாலின் கண்டனம்

0

புதுக்கோட்டையிலுள்ள அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையிலுள்ள பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டது.

இன்று அதிகாலையில் புதுக்கோட்டையிலுள்ள அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையிலுள்ள பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த திராவிடக் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையை காலிகள் சிதைத்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அமைதியைக் குலைக்கும் விதத்தில் ஈடுபட்ட நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தயவுதாட்சண்யமின்றி, இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.