பெருளாதார பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தியா: தவறான பொருளாதார கொள்கைகளே காரணம்- நிபுணர்கள்!

0

உலகவங்கி வெளியிட்டுள்ள உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

உலக வங்கி 2018ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டது. அதில், கடந்த 2017ஆம் ஆண்டில் 5ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது வந்துள்ள பட்டியலில் 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 7ஆம் இடத்தில் உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) அடிப்படையிலே உலக வங்கி இப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி வரிசையாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு இந்தியாவின் ஜி.டி.பி அதிகமாக இருந்தாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் சரிவும், மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் தான், இந்தியா பின்தங்க காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.