பெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்! (1916 – 2018)

0

பெர்னார்டு லூயிஸ்: போர் வெறி பிடித்த சிந்தனையாளர்! (1916 – 2018)

பிரபல கீழைத்தேயவாதியான பெர்னார்டு லூயிஸின் மரணம் இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையாளர்களின் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். ஆக்கிரமிப்பு போருக்கு நியாயம் கற்பிப்பதற்காக பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் ஆசிரியராக திகழ்ந்தவர் லூயிஸ். சோமாலியாவைச் சேர்ந்த ஹிர்ஸி அலி, கனடா நாட்டு குடிமகன் இர்ஷா மஞ்சி, சியோனிச பேனாவை ஏந்திய பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த தாரிக் ஃபதாஹ், கத்தோலிக்க கிறிஸ்தவரான மக்தி ஆலம் உள்ளிட்டோர் தரம் தாழ்ந்த, மசாலா கதைகள் கலந்த ஆய்வுகளுக்கு புகழ் பெற்றவர்கள். புத்தக விற்பனை நிலையங்களின் முன்பகுதியில் அடுக்கிவைக்கப்படும் புத்தகங்களை எழுதும் சல்மான் ருஷ்டியை பின்தொடருபவர்கள். அதனால் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது. அவர்களைப்போல அவ்வளவு தரம் தாழ்ந்தவர் என்று பெர்னார்டு லூயிஸை கூறமுடியாது.

முஸ்லிம்களை தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களை குறித்து படித்தவர் லூயிஸ். இவரைப் போன்றவர்களுக்கு பல்கலைக்கழகங்களே புகலிடம். உயர்ந்த அகாடமிக் தரமுடைய வெளியீடுகளில் நீண்ட அடிக்குறிப்புகளுடன் கூடிய இவர்களின் கட்டுரைகள் வெளியாகும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து படிப்பதற்கு வரிசையில் நிற்கும் அரசு தரப்பு நிபுணர்களுக்கு கல்வியை போதிப்பவர் லூயிஸ். அவருடைய கருத்தரங்குகளில் பங்கேற்பவர்கள் ஆட்சி மட்டத்தில் உயர்ந்த பதவிகளை வகிப்பவர்கள். மரணிக்கும் வரை ப்ரஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தார் லூயிஸ். அவரை சந்திப்பதோ, உரையாடுவதோ கூட சிரமமானது.

பிரிட்டனில் பிறந்த லூயிஸ், பாரிஸ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் காலனிய அறிஞர்களின் புகலிடமாக திகழ்ந்த ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிகன் ஸ்டடீஸில் ஆய்வுகளை தொடர்ந்தார். அவரது ஆய்வுகள் இஸ்லாமும் முஸ்லிம்களுமாகவே இருந்தன. த க்ரைஸிஸ் ஆஃப் இஸ்லாம், இஸ்லாம் அண்ட் த வெஸ்ட், த எமர்ஜன்ஸ் ஆஃப் மாடர்ன் துருக்கி, த அரப்ஸ் இன் ஹிஸ்டரி ஆகியன அவரது முக்கிய நூல்களாகும்.

நூல்களின் உள்ளடக்கம் ஏறத்தாழ ஒரேபோலத்தான் இருக்கும். இஸ்லாத்தை சீர்திருத்தி மேற்கத்திய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதும் இவரின் எழுத்துகளில் பிரதிபலிக்கும். அவரது பிரதான நோக்கம் தனது கனவுக் கன்னியான இஸ்ரேலை பாதுகாப்பதாகும். காலனிய அறிஞர்கள் செய்து வந்த பணியில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியவர் லூயிஸ் என்று கூறலாம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.