பெல்ஜியம்: தலைநகர் பிரசெல்ஸ் நகரில் குண்டு வெடிப்பு

1

பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்சில் இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் நேற்று வெடித்தன. இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஸ்வேண்டம் விமான நிலையத்திலும் மால்பீக் ரயில் நிலையத்திலும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிகின்றன.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ். அமைப்பு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான தாக்குதலுக்கு பெல்ஜியம்ஆதரவு அளித்ததால் இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அனைவரும் இந்நேரத்தில் அமைதியாகவும் ஒற்றுமையுடன் இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக கருதப்படும் மூன்றாவது குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இவரது படம் CCTV யில் பதிவானதை அடுத்து இந்த தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இவர் எடுத்து வந்த குண்டு வெடிக்கவில்லை என்றும் அதில் ரசாயனங்கள், ஆணிகள் மற்றும் ஐ.எஸ். கொடியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் மரண எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

சிரியா போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக பெல்ஜியம் வந்திறங்கிய போது அவர்களை கூடாரங்களில் இருந்து அகற்றி தங்கள் வீடுகளில் இடமளிக்க முன் வந்தவர்கள் பெல்ஜியம் மக்கள் என்பதும் பெல்ஜியம் அரசை அகதிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க வற்புறுத்தியவர்கள் அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் அனைத்தும் அகதிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து வருபர்களுக்கு மேல்தான் இருக்கிறதே அல்லாமல் ஐ.எஸ். கூறுவது போல அதனை தாக்குபவர்கள் மீதான எதிர்தாக்குதலாக இல்லை.
மேலும் ஐ.எஸ். இன் இது போன்ற தாக்குதல்கள் ஐரோப்பவியின் அரசியல் சூழ்நிலையை முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றுவதற்கான முயற்சியாக இருக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது, ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு நாடுகள் மத்திய கிழக்கில் பாதிப்புக்குள்ளான இஸ்லாமிய மக்களுக்காக, குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்காக குரல் எழுப்பி வந்தவர்கள் என்பதும் இன்னும் இஸ்ரேலை புறக்கணிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment

  1. ISIS the stupid cowards. They aren’t Muslims and they should not be muslims.Those devils are Zionist terrorists. These evils are attacking peoples those Who are all giving support and helps to the innocent Muslims. ISIS is Cancer of mankind.Oh Allah please protect the mankind from these ISIS Viruses.