பேய்களினால் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைத் தவிர்க்க KSRTC இல் பூஜை

0

கேரளா போக்குவரத்து கலகமான KSRTC இல் அதிகரித்து வரும் பேருந்து விபத்துக்களுக்குக் காரம் 11 பேய்கள் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்தப் பேய்களை விரட்ட விஷேச பூஜைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 40 க்கும்மேற்பட்ட KSRTC பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பூஜையை நடத்திய ஜோசியர் குண்டம்குழி பாலகிருஷ்ணன் கூறியதாவது, KSRTC பணியாளர்களில் ஒரு பிரிவினர்வந்து தன்னிடம் கேரளா போக்குவரத்துக் கழகம் பேய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் பெருமளவு சாலைவிபத்துக்கள் நடப்பதாகவும் குறிப்பாக மங்களூர் வழித்தடத்தில் அதிகம் நடப்பதாகவும் இவரிடம் முறையிட்டதாகக்கூறியுள்ளார். பின் இவர் விசேச பூஜை மூலம் கேரள போக்குவரத்துக் கழகம் மொத்தம் 11 பேய்களினால் பாதிக்கப்பட்டதாகக் கண்டரிந்தகவும் அதனைப் பூஜைகள் செய்து சரி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பூஜை மாவட்ட போக்குவரத்து அதிகாரி மோகன்குட்டி யின் முன்னிலையில் நடந்ததாகவும் இதற்காக ரூபாய் 20000மும் வசூலிக்கப்பட்டதாக்கவும் கூறப்படுகிறது. இதனைக் குறித்துக் கருத்து தெரிவித்த கேரள போக்குவரத்துத் துறைஅமைச்சர் திருவாஞ்சுர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் KSRTC யை பிடித்திருக்கும் அனைத்தும் பேய்களும் அதன்ஊழியர்களே என்று கூறியுள்ளார். மேலும் இதனைக் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கேரளா போக்குவரத்துத் துறை பேய்களை விட மூடநம்பிக்கைகளால் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது

Comments are closed.