பேரம் பேசும் NIA தொடரும் குற்றச்சாட்டுகள்

0

பேரம் பேசும் NIA தொடரும் குற்றச்சாட்டுகள்

தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. பேரம் பேசுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை தொடர்ந்து பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ. 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு முற்றிலும் முஸ்லிம்களை குறிவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்துத்துவ பயங்கரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போயின. குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளில் பெரும்பான்மையினர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், அல்லது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க., என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் என்.ஐ.ஏ. சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த புதிய திருத்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் இந்தியர்கள் மற்றும் இந்திய நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விசாரிக்கும் அதிகாரம் என்.ஐ.ஏ.விற்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு செசன்ஸ் நீதிமன்றத்தையும் என்.ஐ.ஏ. நீதிமன்றமாக அறிவிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். இதுவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) மற்றும் அணு சக்தி சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டும் விசாரித்து வந்த என்.ஐ.ஏ. இனி, சைபர் குற்றங்கள், ஆள் கடத்தல், கள்ளநோட்டு விவகாரம், சட்டவிரோத ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றங்களையும் விசாரிக்கும். அத்துடன் இனி காவல்துறை அதிகாரிக்கு  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.