பொக்ரான்: பழுதடைந்த குண்டு வெடித்து ராணுவ வீரர் பலி

0

ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் வெடிகுண்டு பயிற்சி தளத்தில் பழுதடைந்த குண்டு ஒன்று வெடித்ததில் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இவர்கள், இராணுவ பயிற்சியின் போது ராக்கட் லான்சர் மூலம் ஏவப்பட்ட குண்டுகளில் வெடிக்காத பழுதடைந்த குண்டுகளை செயலிழக்க சென்றுள்ளனர்.

இந்த வெடி விபத்திற்கு காரணம் பழுதடைந்த குண்டு என்று கூறப்பட்டாலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் உயிரிழந்த வீரர் 14 பொறியியல் ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்தவராவார்.

Comments are closed.