பொதுமக்களுக்காக தங்கள் கதவுகளை திறந்த பிரான்ஸ் நாட்டு பள்ளிவாசல்கள்

0

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு முஸ்லிம்கள் மீதும் அந்நாட்டு பள்ளிவாசல்கள் மீதும் இஸ்லாமிய எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பொதுமக்களிடம் ஏற்பட்ட இஸ்லாமியர் மீதான தவறான கண்ணோட்டமாகும்.

இதனை சரி செய்யும் முயற்சியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் பொதுமக்களுக்கு தங்கள் கதவுகளை திறந்துள்ளன. இஸ்லாம் குறித்தும் இஸ்லாமிய கலாசாரம் குறித்தும் அறிந்துகொள்ள ஆர்வமுடையவர்கள் பயன்பெறும் வகையிலும் இஸ்லாம் குறித்து எதிர்கருத்துள்ளவர்கள் இஸ்லாம் குறித்து சரியான நபர்களிடம் விவாதிக்க தளம் அமைத்து கொடுப்பதற்க்காவும் இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சியை ‘The French Council of the Muslim Faith (CFCM)’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்லாம் என்றாலே அடிப்படைவாதம், பிற்போக்குத்தனம் என்ற என்ன ஓட்டத்தை உடைத்தெறியும் வகையில் முஸ்லிம் அல்லாதவர்கள் தங்களின் சக குடிமகன்களான இஸ்லாமியர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் மற்றும் இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளை விவாதிக்க இது வழி செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் அனோர் கிபிபெக் கூறியுள்ளார்.

Comments are closed.