பொது சிவில் சட்டம் நிறைவேற்ற பெண்கள் உரிமை என்ற போர்வையில் சதி?

0

பொது சிசில் சட்டத்தை நிறைவேற்ற பல முயற்சிகளை பா.ஜ.க. அரசு நடத்தி வந்தாலும் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் வேறொரு யுக்தியை கையாள்கிறது பா.ஜ.க. முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பாரதிய முஸ்லிம் மகிலா அந்தோலன்(BMMA) அமைப்பு மூலம் பா.ஜ.க. பொது சிவில் சட்டத்தை நோக்கிய தனது நகர்வுகளை அமைத்து வருகிறதோ என்ற சந்தேகம் அதிகரிகின்றது.

மும்பையை மையமாக கொண்ட இந்த அமைப்பில் 70000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்து பெண்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என்று போராட்டம் நடத்தியதை தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி வேண்டும் (இஸ்லாத்தில் முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல எந்த தடையும் இல்லை) என்று குரல் கொடுத்தது இந்த அமைப்பு. மேலும் முஸ்லிம் ஆண்களுக்கு விவாகரத்து உரிமை இருப்பது போல முஸ்லிம் பெண்களுக்கும் வேண்டும் (இதற்கும் இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளது) என்றும் கூறி வருகிறது.

தற்போது இந்த அமைப்பு, தாங்கள் வங்காளம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் எடுத்த கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 92 சதவிகித முஸ்லிம் பெண்கள் வாய்வழி விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள் என்றும், 78% விவகாரத்தில் தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், 91.7% தங்கள் கணவர் இரண்டாம் திருமணம் முடிக்க விரும்புவதில்லை என்றும், 75% பேர் பெண்களின் திருமண வயது 18 க்கு மேல் இருக்க வேண்டும் எனவும் 93% பேர் விவாகரத்துக்கு முன்னர் மத்தியஸ்தம் செய்யப்பட வேண்டும் எனவும், 53.2% கணவனால் தாக்கப்படுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய அரசு இது போன்ற முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளது இந்த அமைப்பு. இது குறித்து பாரதிய முஸ்லிம் மகிலா அந்தோலன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக்கியா சோமன் கூறுகையில், “முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தை பெண்களை காக்கும் வண்ணம் திருத்தம் செய்ய வேண்டும்” என்றும் “இது போன்ற திருத்தங்களை முஸ்லிம்கள் செய்யாததினால் அரசாங்கம் செய்ய வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத் தலைவர் ஸஃபர்யாப் ஜீலானி கூறுகையில் ” இந்திய அரசியல் சாசன பிரிவு 25 இன் படி இந்திய சிறுபான்மையினர் தங்களது மதக் கொள்கைகளுகேற்ப தனியார் சட்டங்களை வைத்துக்கொள்ள அனுமதி இருக்கிறது என்றும் இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் தலையீடு இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு கொடுத்த  மத சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என்றும் கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று கூறும் இந்த அமைப்பின் உற்ற தோழனாக கையோடு கை கோர்த்து நிர்ப்பது மதக்கலவரங்கள் மூலம் முஸ்லிம் பெண்களை கற்பழித்து அவர்களின் வயிற்ரை கிழித்த அரசு எனும் போது இவர்களின் நோக்கம் இங்கே கேள்விக்குறியாகிறது.

பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் இந்து பிரிவினர்களிடையே கூட சாத்தியம் இல்லாத சூழலில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தை இது போன்ற அமைப்புகள் மூலம் குரிவைகின்றது  சங்கபரிவார கூட்டங்கள்.

Comments are closed.