பொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக

0

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தநிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பாஜக அரசின் புரியலில்லா பொருளாதார திட்டங்களால்தான் இந்தியா தற்போது பெருமந்தத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இதனை சரி செய்ய திட்டமிடாத பாஜக அரசு, காங்கிரஸ் கட்சிதான் காரணம் என கூறிவருகிறது.

அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகளில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸால், பொருளாதாரம் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிறுனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று குறித்துப் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லாத நிலையில் பல நாடுகள் உள்ளன. இந்தியாவில் மார்ச் 18 அன்று 151 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு மற்றும் தடைகள், பள்ளிக்கூடங்கள் மூடியிருத்தல், சமூக ரீதியாக ஒதுங்கியிருத்தல் போன்றவை ஏற்கனவே பொருளாதாரத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. வேலைதேடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.

கட்டுமானத்துறை, ஓட்டல்கள், விடுதிகள், சுற்றுலாத்துறை மற்றும் பல துறைகளில் மூடப்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை அடுத்து இயல்பு வாழ்க்கையும் முடக்கப்பட்டிருப்பதால், மேலும் பல தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய நிலைமையை எதிர்கொள்வதற்கு ஒருங்கிணைந்த திட்டங்களை மத்திய பாஜக அரசு உருவாக்கவில்லை.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர், கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய மோடி, “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தின் சரிவை மீட்டெடுக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தடுப்புப்படை அமைக்கப்பட்டு சரி செய்யப்படும்” என கூறியுந்தார்.

உயிரிழப்புகள் வேகமாகப் பரவுவதற்குமுன், அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கும்போது, பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கு காரணம் கொரோனா வைரஸ்தான் என பாஜக பழிப்போட்டுள்ளது.

Comments are closed.