பொறாமை கூடாது

0

பொறாமை கூடாது

பகல் உணவு தயாரிப்பதில் ஸாலிஹாவின் அம்மா மும்முரமாக இருந்தார். அன்று விடுமுறை நாள். அதனால் அனைவரும் வீட்டில் இருந்தனர். ஸ்பெஷல் சமையல் என்பதால் வீடு முழுவதும் நறுமணமாக இருந்தது. அனைவரின் பசியையும் அந்த வாசனை தூண்டியபடி இருந்தது.

‘கரீம். ஃபிரிட்ஜில் இருந்து நாலு முட்டை எடுத்துத்தா’ என்று குரல் கொடுத்தார் அவன் தாயார்.

ஐபேடில் விளையாடிக் கொண்டிருந்தவன் அதை ஒரு கையில் தூக்கியபடி ஓடி வந்தான். அப்படியே ஃபிரிட்ஜைத் திறந்து முட்டையை எடுக்கப் பார்த்ததால், டிரேயில் இருந்து இரண்டு முட்டைகள் ‘டப்’ என்று தரையில் விழுந்து உடைந்தன.

‘ஐபேடை வெச்சுட்டு எடுக்கக் கூடாதா?’ என்று அதட்டினாள் அவன் உம்மா.

சப்தம் கேட்டு கிச்சனுக்கு விரைந்து வந்தார் முஸ்தபா. பயந்துபோய் நின்றிருந்தான் கரீம். ‘சரி விடு!’ என்று சமாதானப்படுத்திவிட்டு, தேவையான முட்டைகளை எடுத்துக் கொடுத்தார். பழைய துணியை எடுத்து தரையைச் சுத்தப்படுத்தினார். அப்பொழுது ஃபிரிட்ஜில் திராட்சைப் பழங்கள் சில கனிந்து இருப்பதைப் பார்த்தார். எடுத்துப் பார்த்தால் அவை கெட்டுப் போகும் நிலையில் இருந்தன.

‘கரீம், ஸாலிஹா இங்கே வாங்க’ என்று அழைத்தார். பிள்ளைகள் வந்தனர். ‘மாடியில் பால்கனியில் அணில் வரும் பாருங்க. இந்தப் பழங்களைப் போட்டால் அதுவாவது சாப்பிடும். குப்பையில் கொட்ட வேண்டாம்’ என்று கொடுத்து அனுப்பினார். இருவரும் மாடிக்கு ஓடினர்.

சில நிமிடங்கள் கழித்து, கரீம் சிணுங்கியபடி, உர்ரென்ற முகத்துடன் அழுவதற்குத் தயாரான கண்களுடன் இறங்கி வந்தான். பின்னாலேயே ஸாலிஹா ஓடி வந்தாள். ‘என்ன ஆச்சு?’ என்று விசாரித்த முஸ்தஃபாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பிய குரலில் பேச ஆரம்பித்தான்.

‘நான் க்ரேப்ஸை போட்டால் அணில் சாப்பிடவில்லை. ஆனால் அக்கா போட்டால் மட்டும் சாப்பிடுது.’

‘அடடா! ஏன் அப்படி?’ என்று ஸாலிஹாவைப் பார்த்துக் கேட்டார் முஸ்தஃபா.

‘அது வந்து, கரீம் அணில் கிட்டே ஓடிப்போய் போட்டான். அணில் பயந்துட்டு ஓடுது. நான் தூரத்திலிருந்து தூக்கிப் போட்டேன். அது எடுத்துடுச்சு டாடி.’

‘அப்படீல்லாம் இல்லே. நீயும்தான் கிட்டே போய் போட்ட. ஆனால் அணில் உன்னதை மட்டும் எடுத்துச்சு. என்னதை எடுக்கலே. நான் பார்த்தேன்.’

‘இதற்கெல்லாம் யாராவது அழுவாங்களா?’ என்று சமாதானப்படுத்தினார் முஸ்தஃபா. ஆனாலும் கரீமின் முகம் வாட்டமாகத்தான் இருந்தது. பிறகு அனைவரும் உணவு உண்டனர். அதன்பின் ஓய்வாக முஸ்தஃபா சோபாவில் அமர்ந்தபோது, அவரது மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான் கரீம்.

‘உங்களுக்கு ஆதம் நபி காலத்து செய்தியைச் சொல்லட்டுமா?’ என்று கேட்டார் முஸ்தஃபா. ‘உம்’ என்றாள் ஸாலிஹா. படுத்தபடி தலையை மட்டும் ஆட்டினான் கரீம்.

‘ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவர் பெயர் ஹாபீல். மற்றவர் பெயர் காபீல். அவர்கள் இருவருக்கும் இடையே ஒருநாள் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது ஆதம் (அலை) தம் மகன்களிடம் நீங்கள் இருவரும் அல்லாஹ்வுக்கு காணிக்கை கொடுங்கள் என்று தெரிவித்தார்.’

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.