பொறியியல் மாணவர்கள் அறிவியலோடு வேதங்களையும் புராணங்களையும் கற்க வேண்டும்: AICTE

0

பொறியியல் மாணவர்களுக்கான புதிய கல்வித்திட்டத்தில் அறிவியலோடு வேதங்களையும், புராணங்களையும், தர்க சாஸ்திரத்தையும் கற்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (AICTE) தெரிவித்துள்ளது.

இந்த புதிய பாடதிட்டத்தின் கீழ் நவீன அறிவியல் உலகபார்வையுடன், இந்திய தத்துவம், மொழி மற்றும் கலை பாரம்பரியத்தை பற்றியும் யோகாவும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தொழிற்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட இருக்கும் இந்த புதிய பாடத்திட்டம் வெறும் பாடப்புத்தகங்களை காட்டிலும் செயல்முறை வடிவிலான பாடத்திட்டமாக இருக்கும் என்று அதனை அறிமுகப்படுத்திய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாடத்திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், இந்தியாவில் உயர் கல்வி, குறிப்பாக தொழில்நுட்ப கல்வி கடந்த சில ஆண்டுகளாக அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறியுள்ளார். இன்னும் கட்டாய தொழில்பயிற்சி மற்றும் சமூகப்பயிற்சி பொறியியல் பட்டதாரிகளை சமூகத்தோடு இணைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.