போதை, ஆபாசத்திற்கு முடிவுரை எழுதுவோம்

0

போதை, ஆபாசத்திற்கு முடிவுரை எழுதுவோம்

இத்தொடர் துவங்கிய பின் ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். பல்வேறு கருத்துகளை விவாதித்த அந்த இளைஞர் ஒரு சட்டக் கல்லூரி மாணவர். அப்போது அவரிடம் ‘மாணவ சமூகத்தின் இன்றைய சவாலாக எதனை பார்க்கின்றீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆபாச படங்கள் பார்ப்பதும், போதை உட்கொள்வதை தவறாக கருதாததும்’ என்று கூறினார்.

இன்றைய நவீன உலகில் ஆபாச படங்கள் பார்ப்பதும், போதை உட்கொள்வதும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இதை இன்றைய இளைய சமூகத்தின் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த தீய நோய்களால் பீடிக்கப்பட்டு சீர்கேட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அரசின் அணுகு முறையும் ஒரு காரணம். மதுவுக்கு எதிராக விளம்பரங்களை செய்யும் அரசு மது கடைகளில் கல்லா கட்டுவது எப்படி என்கிற ஆய்வுகளையும் மேற்கொள்கின்றது. அதுவும் திருவிழா மற்றும் பண்டிகை தினங்களில் கடந்த ஆண்டின் வருவாயை விட எவ்வாறு அதிகம் ஈட்டுவது என்று திட்டங்களை வகுக்கின்றது. அரசின் பட்ஜெட்டுக்கு ஆணி வேறாக மது வருமானத்தை முன்னிறுத்துகிறது மக்கள் நல அரசு என்பது வேடிக்கையான உண்மை.

மேற்கூறிய போதை மற்றும் ஆபாச படங்கள் பார்ப்பது தனி மனித சீர்கேடு என்ற நிலையிலிருந்து சமூக சீர்கேடு என்ற நிலைக்கு சென்றுவிட்டது. மதுவின் மூலம் ஏற்படும் சீர்கேட்டில் அரசிற்கு எவ்வாறு பொறுப்பு இருக்கிறதோ, அதே போன்று போதை மற்றும் ஆபாசம் என்கிற இவ்விரண்டு சமூக தீமைகளை உருவாக்குவதிலும் ஊக்குவிப்பதிலும் சினிமா உலகிற்கு அளப்பெரும் பங்குண்டு. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.