போபால் சிறைக்கைதிகள் என்கெளவுண்டர்: ஏன் சிபிஐ விசாரணை இல்லை என்று கேட்கும் உச்ச நீதிமன்றம்

0

சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 பேர் சிறையில் இருந்து தப்பியதாகக் கூறி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீது சுதந்திரமான விசாரணை வேண்டும் என்ற மனுவை தொடர்ந்து மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிமன்ற பென்ச், மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேச அரசுகள் இந்த வழக்கில் சிபியை விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மஹ்மூதா முஹம்மத் சலீம் முச்சாலே என்பவர் அவரின் வழக்கறிஞர் சித்தார்த் தேவ் என்பவர் மூலம் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இவ்வருடம் பிப்ரவரி மாதம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக பதிவு செய்த சிறப்பு விடுப்பு மனு மீது இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் 13 கேள்விகளை கேட்ட மனுதாரர் இந்த என்கெளவுண்டர் சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் “ஒவ்வொரு முறை காவல்துறை என்கெளவுண்டர் நடைபெறும் போது, புகார் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும், ஆதாரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது.” என்று கூறியுள்ளார். மேலும் தற்போதைய விசாரணையின் நம்பகத்தன்மை குறித்தும் மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு காரணம் அவசர அவசமாக IPS அதிகாரி விசாரணை உத்தரவு பிறப்பித்ததும் 1952 விசாரணை கமிஷன் சட்டப்படி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்தது என்று கூரியுள்ளார்.

இத்துடன் மத்திய பிரதேச முதல்வர் இந்த என்கெளவுண்டரில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு பரிசுத்தொகை அறிவித்ததும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட விசாரணை கைதிகளை தீவிரவாதிகள் என்று வெளிப்படையாக கூறியதும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும் மனுவில், இந்த விசாரணையில் மத்திய பிரதேச காவல்துறையின் ஈடுபாடு குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. “மத்திய பிரதேச அரசால் எத்துனை விசாரணைகள் நடத்தப்பட்டாலும் அதில் தங்களது உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் அதிகாரிகளின் ஈடுபாடு இருக்குமேயானால் அது சரியான முடிவை தராது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இந்த என்கெளவுண்டர் குறித்து விசாரணை நடத்திய ஒரு மனித விசாரணை கமிஷனின் விசாரணை முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பிய இந்த மனுவில். இந்த விசாரணை கமிஷன் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தவோ அல்லது சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவோ இல்லை என்று கூறியுள்ளது.

இந்த விசாரணையை ஒரு மோசடி என்று கூறிய மனுதாரர் இதனை நீதிமன்றம் நியமிக்கும் சிபிஐ மற்றும் SIT குழு விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக இந்த என்கெளவுண்டரில் கொல்லப்பட்ட ஒருவரின் தாய், விசாரணை தொடர்பான ஆவணங்களை கேட்டபோது உயர்நீதிமன்றம், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த ஆவணங்கள் மற்றும் விசாரணையை பொறுத்தவரை அந்நியர்கள்” என்று கூறி அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.