போரிஸ் ஜான்சனின் வெற்றி தரும் செய்தி!

0

போரிஸ் ஜான்சனின் வெற்றி தரும் செய்தி!

«பாரிஸ் ஜான்சனின் வெற்றி பிரெக்சிட்டுக்கு (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம்) ஆதரவான பிரிட்டீஷ் மக்களின் தீர்ப்பாக பொதுவாக கருதப்படுகிறது. ஐரோப்பாவின் பரந்த இருப்பிலிருந்து விலகி பிரிட்டிஷ் தேசபக்தியின் குறுகிய வட்டத்திற்குள் ஒடுங்க முயற்சிக்கும் தேசியவாதிகளின் உணர்வுகளை இந்தத் தேர்தல் பிரதிபலித்தது. ஆனால், இந்த தேர்தல் வெற்றியின் உள் மட்டங்களில் இன்னும் கவனமாக ஆய்வு செய்யவேண்டிய கூறுகளும் உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் உலகம் முழுவதும் வலுப்பெற்று வரும் வலதுசாரி சித்தாந்தத்தை நோக்கி பிரிட்டன் நகர்கிறதா என்பது குறித்த சில ஆபத்தான அறிகுறிகளை காணமுடிகிறது.

பிரிட்டீஷ் முஸ்லிம்களின் அமைப்பான பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் (எம்.சி.பி.) வெளிப்படுத்தியுள்ள கவலை இந்த சூழலில் மிகவும் பொருத்தமானது. பிரெக்சிட்டைப் போலவே இஸ்லாமோஃபோபியாவும் போரிஸ் ஜான்சனின் வெற்றியின் பின்னால் செயல்பட்டுள்ளது என்பது உண்மையாகும். கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் முஸ்லிம் வெறுப்பின் தொனிகள் தென்பட்டன. போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்த பெரும் வெற்றி இந்த முஸ்லிம் வெறுப்பை இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாகுமா என்ற கவலை பிரிட்டீஷ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.