போலிச் செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறை: புதிய சட்டத்திற்கு மலேசியா திட்டம்

0

சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பரவி வரும் போலிச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் அபராதம் முதல் பத்தாண்டு காலம் சிறை தண்டனை வரை விதிக்க மலேசியா அரசு சட்டம் ஒன்றை திட்டமிட்டு வருகிறது.

இந்த சட்டம் பொதுமக்களை போலி செய்திகளில் இருந்து காக்கவும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி போலிச் செய்திகளானது, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ போலியான தகவல்களை கொண்ட தரவுகள், தகவல்கள் மற்றும் செய்திகள் என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய பதிப்புகளை உள்ளடக்கும் இந்த சட்டம் மலேசியாவோடு நின்றுவிடாமல்  குறிப்பிட செய்தி மலேசியாவின் குடிமக்களை பாதிக்குமெனில் மலேசியாவிற்கு வெளியேயும் பயன்படுத்துமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினால் பொதுமக்கள் தாங்கள் பகிரும் செய்திகளில் பிகவும் கவனமாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்கட்சிகள் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து கேள்வி எழுபியுள்ளனர். ஊடகங்களின் மீது பல அதிகாரகளை செலுத்தக்கூடிய சட்டங்கள் பல அரசிடம் ஏற்கனவே இருக்கும் நிலையில் இந்த புதிய சட்டத்தின் அவசியம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மலேசியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த புதிய சட்டம் பத்திரிகைகள் மீதான தாக்குதல் என்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் எதிர்கட்சியை சேர்ந்த தலைவர் ஒங் கியான் மிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆளும் மலேசிய ஆரசு மீது வெளிநாட்டு ஊடகங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் அரசின் அனுமதி பெறாமல் வெளியிடக் கூடாது என்று மலேசிய ஊடகங்களுக்கு மலேசிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் போலிச் செய்திகளுக்கு எதிராக சட்டங்களை முன்மொழிந்து வருகிறது.

Comments are closed.