போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சி.பி.ஐ. இணை இயக்குநர் பதவி

0

சி.பி.ஐ.யின் டெல்லி இணை இயக்குநராக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான குஜராத் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி அருண்குமார் ஷர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது. ஏ.கே.சர்மா தற்போது அஹமதாபாத் க்ரைம் பிரிவின் சிறப்பு இயக்குநனராக உள்ளார். இந்த சிறப்பு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சொஹ்ரபுதீன் ஷேக், அவரது மனைவி கௌஸர்பீ, துளசிராம் பிரஜாபதி, இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்குகளை குஜராத் சி.பி.ஐ விசாரித்தது.இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கை சீர்குலைக்க அழைக்கப்பட்ட அதிகாரிகளின் கூட்டத்தில் சர்மாவும் பங்கேற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.மேலும் கட்டிட கலை கலைஞரான இளம்பெண்ணை கண்காணித்த சம்பவத்திலும் சர்மாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.
மற்றொரு இணை இயக்குநரான குஜராத் அதிகாரி கேசவ் குமாரின் பதவி காலத்தையும் மத்திய அரசாங்கம் ஓர் ஆண்டு நீட்டித்துள்ளது.

Comments are closed.