போலி என்கௌண்டர் வழக்கு: மூன்று காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

0

போலி என்கௌண்டர் வழக்கில் மூன்று உத்தர பிரதேச காவலர்களுக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்துள்ளது. ஸ்மிதா பதூரி மற்றும் மோகித் தியாகி ஆகிய இரண்டு கல்லூரி மாணவிகளை அவர்கள் காரில் இருக்கும் போது சுட்டதில் ஸ்மிதா பதூரி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். ஜனவரி 14, 2000ஆம் ஆண்டில் மீரட்; நகருக்கு உட்பட்ட சிவாயா வன பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது.
காவல்துறையினர் சில குற்றவாளிகளை துரத்தி செல்லும் போது அந்த குற்றவாளிகள்தான் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினரின் கூற்றை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக இன்ஸ்பெக்டர் அருண் கௌசிக் மற்றும் கான்ஸ்டபிள்கள் பகவான் சகாய் மற்றும் சுரேந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பதினைந்து வருடங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பு இந்த வழக்கில் 21 சாட்சிகளை ஆஜர் படுத்தினர். கொல்லப்பட்டவரின் நண்பரான மோகித் தியாகி முக்கிய சாட்சியாக இருந்தார்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தௌராலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஏப்ரல் 2000ல் இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களுக்கு எதிராக 2005ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

Comments are closed.