போலி வாக்குமூலங்களை கொடுக்க வற்புறுத்தும் NIA

0

ஹைதராபாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று கூறி கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நோமான் ஜமீல், அத்னான் அஹ்மத் ஆகிய இளைஞர்களை போலியான வாக்குமூலங்களை அளிக்கக் கூறி தேசிய புலனாய்வுத் துறையினர் துன்புறுத்துவதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.

ஹைதராபாத் சிவில் சொசைடி பிரதிநிதிகளும் இந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்களும் ஊடகங்களை சந்தித்து இவர்கள் எவ்வாறு சாட்சிகளாக மாற NIAவினால் வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அதை அவர்கள் செய்ய மறுக்கும் பட்சத்தில் கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்க வைத்துவிடுவோம் என்று மிரட்டப் படுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இவர்களுக்கு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் NIA வின் இந்த துன்புறுத்தல் தொடங்கிவிட்டதாக அந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களை இதே காரணத்திற்காக டில்லி அழைத்து செல்லவும் NIA திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அத்னான் கூறுகையில், “கடந்த ஜூலை 1 ஆம் தேதி பேகம்பேட்டில் உள்ள NIA அலுவலகத்திற்கு தான் அழைக்கப்பட்டதாகவும் அங்கு தன்னிடம் சில கோப்புகளில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் பின்னர் சமீபத்தில் NIA ஹைதராபாத்தில் செய்த சில கைதுகளுக்கு சாட்சியாக ஆகும்படி கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களுடன் டில்லி சென்று சாட்சி கூற மறுத்தால் தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டப்பட்டதையும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னை ஏன் இந்த வழக்குகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.”

முன்னர் தான் துருக்கிக்கு பயணம் மேற்கொள்ள இருந்ததாகவும் பின்னர் தானே தன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும், அதன் பிறகு தன்னை NIA தொடர்புகொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் ஒரு ஐ.எஸ். ஆதரவாளர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து நோமன் கூறுகையில், ” எனக்கு தெரியாத நபர்களை ஃபேஸ்புக்கில் நண்பர்களாக சேர்க்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதனால் என்னை அறியாமலேயே சில நபர்களை நான் என் நட்பு வட்டத்தில் சேர்த்ததினால் NIA என்னை சந்தேகிக்கிறது. நான் சாதாரணமாக ஈராக் குறித்து இணையதளத்தில் தேடுவது உண்டு, அந்த வகையில் ஈராக் குறித்த செய்திகளையும் வீடியோக்களையும் நான் பார்த்ததுண்டு. அதனாலேயே நான் ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன் என்று அர்த்தமாகாது. இந்த காரணத்திற்காக காவல்துறை என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவுரை வழங்கியது.

பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஹைதராபாத் சிவில் சொசைடி உறுப்பினர்கள் உண்மை அறியும் குழு ஒன்றின் விசாரணையின் போது சந்தித்துள்ளனர். அத்னான் மற்றும் நோமன் ஜமீல் ஆகிய இருவரும் 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்கிற பெயரில் கைது செய்யப்பட்டு காவல்துறையின் அறிவிரைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். இந்த இரு இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நிம்மதியாக வாழ விடுமாறு மாநில மற்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments are closed.