போலி 2000 ரூபாய்களை தொடர்ந்து ATM  வெளிவந்த வரிசை எண் இல்லாத 500 ரூபாய் தாள்கள்

0

மத்திய பிரதேசம் தாமோ பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியரான நாராயன் அஹிர்வால் வங்கி ATM இல் இருந்து 1000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சியாக ATM இல் இருந்து வெளியான இரண்டு 500 ரூபாய் தாள்களிலும் வரிசை எண்கள் அச்சிடப்படாமல் இருந்துள்ளது.

அவர் வங்கி ATM இல் வெளியேறும்போதே பிறரிடம் வரிசை எண்கள் இல்லாத ரூபாய் தாள்களை காண்பித்து இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக அதே ATM  இல் பணம் எடுத்த சஞ்சய் அசாத்தி என்பவருக்கும் வரிசை எண்கள் இல்லாத ரூபாய் தாள்களே ATM இல் இருந்து வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிலர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து அந்த வங்கி ATM ஐ சில நேரம் முடக்கி வைத்துள்ளனர்.

தனக்கு கிடைத்த 500 ரூபாய் நோட்டுக்களை அருகில் உள்ள வங்கிக்கு எடுத்துச் சென்ற நாராயண் அதனை வங்கி அதிகாரிகளிடம் காண்பித்து மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

மற்றொருவரான அசாத்தி வங்கிக்கு செல்கையில் அவரை வங்கி மேலாளர் சந்தித்து இது குறித்து எதுவும் பேசவில்லை என்றும் பிற வங்கி அதிகாரிகள் நடந்த சம்பவத்தை எழுத்துப் பூர்வமாக தருமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

இது போன்ற சம்பவங்கள் தாமோவில் நடப்பது இது முதன் முறை அல்ல. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது போன்று நான்கு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக கந்தாநகர் ATM ஒன்றிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் ஆனால் அது தொடர்பாக காவல்துறை புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தாமோ பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் திலக் சிங் கூறுகையில், “இந்த சம்பவங்கள் பற்றிய என்னிடம் செய்திகள் வந்தன. ஆனால் இது வரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியோ, பணத்தை பெற்ற நபர்களோ அல்லது மக்களோ முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக புகார் ஏதும் வந்தால் கண்டிப்பாக நாங்கள் இதனை விசாரணை செய்வோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

வங்கி அதிகாரிகளோ இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் சமையத்தில் பணம் பெற்றவர்களை எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை எழுதிப் பெற்றுகொள்வோம் என்றும் அந்த ரூபாய் தாள்களை உடனடியாக மாற்றித்தருவது என்பது இயலாத காரியம் என்று கூறியுள்ளனர்.

முன்னதாக 2000 கள்ள நோட்டுக்கள் வங்கி ATM கலீல் இருந்து வெளியானதும் Reserve Bank of India என்பதற்கு பதிலாக “Children’s Bank of India “ என்று அச்சிடப்பட்ட ரூபாய் தாள்கள் ATM இல் இருந்து வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்திகள்). இது போன்ற நிகழ்வுகள் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

Comments are closed.