ப.சிதம்பரம் கைது: காங்கிரஸ் பயில வேண்டிய பாடங்கள்

0

ப.சிதம்பரம் கைது: காங்கிரஸ் பயில வேண்டிய பாடங்கள்

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மத்திய புலனாய்வு துறையால் (சி.பி.ஐ.)ஆகஸ்ட் 21 இரவில் கைது செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் 2018 பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான இந்திராணி முகர்ஜி மற்றும் அவர் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர். ஆனால் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை இவர்கள் சந்தித்து ஒப்புதல் பெற்றதாகவும் அதற்கு பலனாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பெரும் தொகை கமிஷனாக வழங்கப்பட்டது என்பதும்தான் குற்றச்சாட்டு. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.