மகத்தான இரவு சுமந்து வந்த வேதம்

0

மகத்தான இரவு சுமந்து வந்த வேதம்

அல்குர்ஆன் இத்தரணியில் —-ஆசைகளுக்கு அகப்பட்டுவிடாத, வாழ்வை அற்ப நோக்கங்களுக்காக அசிங்கப்படுத்திக் கொள்ளாத, தன்னலத்தை விட பிறர் நலன் பேணப்படுவதில் உவகையுறுகின்ற ஒரு சமூகத்தைக் காண விரும்புகிறது. இத்தகைய ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பது இலகுவான காரியமன்று. உலகத்தில் தரமான மனிதர்களை உற்பத்தி செய்வதை விட, உருவாக்குவதை விடக் கஷ்டமான பணி வேறெதுவும் கிடையாது. இதனால்தான் அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தில் நோன்பு வைப்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களின் வாழ்வை பலசமயம் அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்கு தூண்டுகோலாக அமைகின்ற வயிறும் காமமும் வாழ்வை உன்னத இலட்சியங்களை விட்டும் அவர்களைத் திசை திருப்பி விடாதிருப்பதற்கான ஒரு பயிற்சிப் பட்டறையாக நோன்பு அமைந்துள்ளது.

அல்குர்ஆன் மனித வாழ்வை அர்த்த முள்ளதாக மாற்றுகின்ற ஒரு மகத்தான வேதம். இந்த வேதம் ரமலானில் அருளப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே இம்மாதத்தில் நோன்பு வைக்குமாறு ஏவப்பட்டிருக்கிறது.

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை -& தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப், பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) அல்குர்ஆன் (2 : 185)

இறைவழி காட்டலின் பெறுமதியை உணர்ந்த உள்ளங்கள்தான் அவ்வழிகாட்டலை சிரமேற்——— கொண்டு புனித ரமலானில் நோன்பு வைக்குமாறு பணிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்கின்றன. இன்னொரு புறம் அவ்விறைவழிகாட்டலின் படி ஒரு உன்னத வாழ்வு வாழ்வதற்குத் தேவையான இன்றியமையாத ஓர் ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

லைலத்துல் கத்ர்

அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்துக்கே ஒரு தனிச்சிறப்பு இருப்பதாயின் அது முதலில் இறக்கப்பட்ட இரவுக்கு இறைவனிடத்தில் எத்தகைய அந்தஸ்து இருக்கும் என்பது தெளிவு. அல்குர்ஆன் முதலில் இறக்கியருளப்பட்ட அவ்விரவை இறைவன் ‘லைத்துல் கத்ர்’ என வர்ணிக்கிறான்.

“நிச்சயமாக நாம் அதை (அல்குர்ஆனை) லைத்துல் கத்ர் எனும் இரவில் இறக்கினோம்” (அல்குர்ஆன் 97 : 1)

இவ்விரவு இப்பெயரைப் பெறுவதற்கு பல காரணங்களை இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் பிரதானமானதாக பின்வரும் இருகாரணங்களையும் குறிப்பிடலாம்.

  1. ‘கத்ர்’ எனும் அரபுப் பதத்துக்கு கண்ணியம், அந்தஸ்து, மகத்துவம் போன்ற கருத்துகள் உள்ளன. இறைவனிடத்தில் இவ்விரவு எவ்வாறு மகத்துவம் பொருந்தியது, அஸ்தஸ்துக்கு உரியது என்பதை உணர்த்தவே இவ்விரவை ‘மகத்தான இரவு’ என வர்ணித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை விழித்து உரையாற்றும் போது ‘ரமலான் மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. அது பாக்கியம் பொருந்திய மாதம், அதில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். சுவன வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரக வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கன் அதிலே விளங்கிடப்படுகின்றன. அதில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இருக்கிறது. யார் அதனது நன்மைகளைப் பெறவில்லையோ அவர் அனைத்து நன்மைகளையும் இழந்தவராவார்” என குறிப்பிட்டார்கள். (அஹ்மத், நஸாஈ)

இவ்விரவில் செய்யப்படும் நன்மைகள் ஆயிரம் மாதங்களில் செய்யப்படும் நன்மைகளை விட சிறந்தவை என்பதையே இந்த ஹதீஸும் ‘‘கண்ணியம் மிக்க அவ்விரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும்” (அல்குர்ஆன் 97 : 3) என்ற அல்குர்ஆன் வசனமும் உணர்த்தி நிற்கின்றன.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.