மகனை கொன்ற ஆர்.எஸ்.எஸ்.: இஸ்லாத்தை ஏற்ற தாய்

0

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முஹம்மது ஃபைசல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பாக அவரது உறவினரான வினோத் உட்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். (பார்க்க செய்தி)

இவரது மனைவியும் குழந்தைகளும் முன்னதாக இஸ்லாத்தை ஏற்றிருந்த நிலையில் தற்போது அவரது தாயும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் மீனாக்ஷி என்ற அவர் கூறுகையில், தனது 32 வயது மகன் இஸ்லாத்தை ஏற்க தான் அனுமதியளித்திருந்ததாகவும் அவர் இஸ்லாத்தை தழுவிய பின்னும் தனது குடும்பத்துடன் நெருங்கி வாழ்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் “என்னிடம் அனுமதி வாங்கிய பின்னரே ஃபைசல் இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தை ஏற்ற பின்னும் குடும்பத்துடன் நெருங்கி வாழ்ந்து வந்தார். ஃபைசலின் இந்த முடிவு அவரது வீட்டில் அருகே வாழ்ந்த சங்க்பரிவார கும்பலை சேர்ந்தவர்களும் எங்கள் குடும்பத்தினர் சிலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. (ஃபைசலின் சகோதரியுடைய கணவரான ) வினோத் ஃபைசலின் தலையை வெட்டிவிடுவதாக மிரட்டினார். இதனை அவர் என்னுடைய மகளிடம் கூட கூறியுள்ளார்.“ என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைகளை கற்றுக்கொள்வதற்காக ஃபைசலின் மனைவி மற்றும் குழந்தைகள் பொன்னானி செல்ல இருந்த நிலையில் தற்போது இஸ்லாத்தை ஏற்ற ஃபைசலின் தாயும் அவர்களுடன் செல்வார் என்று தெரிகிறது.

Comments are closed.