மகாத்மா காந்தியை “பாகிஸ்தானின் தந்தை”: பாஜக நிர்வாகி பதிவால் சர்ச்சை

0

மத்திய பிரதேச மாநிலம் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்தவர் அனில் சவுமித்ரா. இவர் சமூக வலைத்தளத்தில், மகாத்மா காந்தி, இந்தியாவின் தந்தை கிடையாது. அவர் பாகிஸ்தானின் தந்தை என பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து அனில் சவுமித்ரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் ராகேஷ் சிங் நேற்று உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்துக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு கெடு விதிக்கப்பட்டது.

Comments are closed.