மகாராஷ்டிராவில் பசு குண்டர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் கொடுத்த பொதுமக்கள்

0

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பசு பாதுகாவல் என்கிற பெயரில் சிறுபான்மை மற்றும் தலித் சமூக மக்களை ஃபாசிச பயங்கரவாதிகள் தாக்கி வருவதும் கொலை செய்வதும் வழக்கமாக நடந்து வரும் வேலையில் தமிழகத்தை அடுத்து தற்போது மகாராஷ்டிராவில் சட்டத்தை கையில் எடுத்த பசு பயங்கரவாதிகளுக்கு மக்கள் அவர்கள் பாணியில் பதிலளித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பசுக்களை ஏற்றிச்சென்றதாகக் கூறப்பட்ட ஒரு வாகனத்தை மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்கள் குண்டர்கள் கடந்த சனிக்கிழமை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஸ்ரேகோண்டா தாலுக்கவிற்கு சென்ற அகில் பாரதிய கிருஷி காவ் சேவா சங் என்ற அமைப்பை சேர்ந்த 12 பேர் அங்குள்ள வாகனத்தை சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சொதனையிட்டதாக கூறப்படுகிறது. பசு குண்டர்களின் இது போன்ற சோதனைகளின் போது வாகன ஓட்டுனர்கள் கடுமையாக தாக்கப்படுவதும்  பல நேரங்களில் கொலை செய்யப்படுவதும் வழக்கமாகி வரும் நிலையில் இந்த வாகனத்தில் சென்றவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

அங்கு ஏற்ப்பட்ட மோதலில் பசு பாதுகாவல் கும்பலுக்கு சரமாரியாக அடி உதை விழுந்ததாக தெரியவந்துள்ளது. இதில் பல பசு பாதுகாவல் குண்டர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசு பாதுகாவல் கும்பல் நடத்தும் தாக்குதல்களில் சிறுபான்மை சமூகத்தவர்கள் கொல்லப்பட்டாலும் அந்தக் கொலைகள் வீடியோ பதிவு செய்யப்பட்ட போதும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எப்போதும் சாக்கு போக்கு காட்டிவந்த காவல்துறை இந்த சம்பவத்தில் மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் உட்பட பலரை காவல்துறை மகாராஷ்டிரா விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. மேலும் இவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளையும் காவல்துறை சுமத்தியுள்ளது. இவர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்பட்ட பத்து பசு மாடுகள் மற்றும் பத்து காளைமாடுகளை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து பொதுமக்களிடையே இரு வேறான கருத்துகள் நிலவி வருகிறது. சிலர் பசு பாதுகாவல் குண்டர்கள் மீதான தாக்குதலும் பசு பாதுகாவல் என்கிற பெயரில் நடக்கும் தாக்குதலுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்றும் இரண்டுமே சட்டத்தில் கையில் எடுப்பதுதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ தற்போது பசு பாதுகாவலர்கள் தங்களின் செயல்களுக்கான அறுவடைகளை பெற்று வருகின்றனர் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed.