மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி ஹிம்மன்ஷு ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

0

மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி ஹிம்மன்ஷு ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி ஹிம்மன்ஷு ராய் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1:40 மணியளவில் தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை 26/11 தீவிரவாத வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்திய இவரின் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

1988 மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராய், தனது பணிக்காலம் தொடங்கிய 1991 முதல் பல முக்கிய வழக்கு விசாரணைகளை சந்தித்தவர். பாபரி மசூதி இடிப்பிற்கு பிந்தைய கலவரங்கள் இவரது பணிக்காலத்தில் நடைபெற்றது. 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் போது தீவிரவாதிகளை எதிர்கொண்ட குழுவில் இவரும் ஒருவர். பின்னர் அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை மேற்பார்வையிட்டவரும் இவரே. இத்துடன் ஐபிஎல் சூதாட்ட வழக்கு, கைர்லாஞ்சி தலித் படுகொலை வழக்கு என்று பல வழக்குகளை இவர் கையாண்டார். மும்பை தீவிரவாத தடுப்புத்துறைக்கு மாற்றப்பட்டதும் மென்பொருள் பொறியாளர் அனீஸ் அன்சாரி என்பவரை பந்த்ரா குர்லா கட்டிடத்தில் உள்ள அமெரிக்கன் பள்ளியை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டதாகக் கூறி கைது செய்தார். இது தவிர இவர் விசாரித்த வழக்குகளில், தாவூத் இப்ராஹீம் சகோதரர் இக்பால் கஸ்கரின் ஓட்டுனர் ஆரிஃப் பேல் மீதான துப்பாக்கிச் சூடு, பத்திரிகையாளர் J.தே கொலை வழக்கு, விஜய் பலந்தே மற்றும் லைலா கான் இரட்டை கொலை வழக்குகளுடன் சமீபத்திய பல்லவி புர்கயஸ்தா கொலை வழக்கு ஆகியவை சில.

இவரது மறைவிற்கு IPS சங்கம் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவில்,” மிகப்பெரிய துக்க சம்பவத்தில் எங்களது சிறந்த அதிகாரிகளில் ஒருவரான 1998 ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஹிம்மன்ஷு ராயயை இழந்துள்ளோம். மிகவும் வீரமிக்க ஆதிகாரியான அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் குடுபத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது அனுதாபங்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.