மகாராஷ்டிரா முதல்வர் பதிவியை பகிர பாஜக – சிவசேனா ஒப்புதல்!

0

கடந்த மக்களவை தேர்தலிலும் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்தன. பிறகு இரு கட்சிகளுக்குமிடையே பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியது. இதனால், சிவசேனா, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து தற்போதைய மக்களவை தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 352 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணி, வருகிற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தொடர உள்ளது.

மகாராஷ்டிர பாஜக அமைச்சரான சுதிர் முங்கண்டிவார், ”வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி தொடரும். இந்த கூட்டணி வெற்றி பெற்று அடுத்த முதல்வராக பாஜகவை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என தெரிவித்திருந்தார். இது சிவசேனா கட்சியினருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் ஒருவர், ”கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைத்த போது இரு கட்சிகளும் முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை வருடங்களாக பங்கிடுவதாக தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதில் மாறுதல் ஏதும் இல்லாததால் அடுத்து பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் ஆக மாட்டார்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply