மக்காவை தாக்க வந்த இரண்டு ஏவுகணை: சவுதி அரசால் முறியடிப்பு!

0

நேற்று மக்காவை நோக்கி வந்த இந்த இரண்டு ஏவுகணைகளும் சவுதி அரசால் தடுக்கப்பட்டது. ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாகவும், ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி அரசு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஹவுத்தி புரட்சியாளர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என செய்திகள் பரவி வருகிறது.

மக்காவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாயிப் மற்றும் ஜித்தா பகுதிகளின் அருகே இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் தகர்க்கப்பட்டாலும், மீண்டும் தாக்குதல் நடைபெறாமல் இருக்க சவுதி அரசு பாதுகாப்பை பலபடுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.