மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தா விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை: NIA

0

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தா விடுதலையை எதிர்த்து முறையீடு செய்யப்போவதில்லை: NIA.

2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசீமானந்தாவை அவ்வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை நீதிமன்றம் விடுவித்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று NIA தெரிவித்துள்ளது.

இது குறித்து NIA வின் மூத்த அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள 18 விஷயங்களில் 3 தங்களால் நீதிமன்றதில் எதிர்கொள்ள கடினமானவை. அதனால் ஹைதராபாத் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாங்கள் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசீமானந்தாவின் வழக்கறிஞர் கருத்துக் தெரிவிக்கையில், இந்த வழக்கில் அசீமானந்தாவிற்கு எதிராக எந்த ஆதரங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. இந்த தீர்ப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படித்திருப்பார்கள். அதனால் அவர்கள் மேல் முறையீடு செய்யவில்லை என்று நான் நினைக்கின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தொடர்புடைய அனைவரையும் விடுவித்து ஹைதராபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டபோது அந்த தீர்ப்பு நகலை படித்த NIA, உயர் நீதிமன்றத்தில் தாங்கள் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.