மசூதிகளை இடிக்கலாம் – கோவில்களை இடிக்கக் கூடாது: சு.சுவாமி

0

பாஜக வில் சர்ச்சைகளுடன் தொடர்பு படுத்தப்படுபவர்களில் பெயர்போனவரான சுப்பிரமணிய சுவாமி சமீபத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் மசூதிகளை இடிக்கலாம் என்றும் ஆனால் கோவில்களை இடிக்கக் கூடாது, ஏனென்றால் அங்கு கடவுள் வாழ்கிறார் என்று கூறியுள்ளார்.

இன்னும் மக்கள் மசூதிகளையும் கோவில்களையும் ஒரே மாதிரியான வழிபாட்டுத் தளங்கள் என்று தவறாக நினைத்துள்ளனர் என்றும் தன்னைப் பொறுத்தவரை மசூதி என்பது முஸ்லிம்கள் தொழுவதற்கு ஏற்ற ஒரு இடம், அவ்வளவே என்று கூறியுள்ளார். மேலும் முஸ்லிம்கள் மசூதிகள் இல்லாமலும் தொழுகை நடத்தலாம் ஆனால் கோவில்களை பொறுத்தவரை அவ்வாறல்ல, கோவிலில் உள்ள சிலைகளில் கடவுள் புகுந்து அதன் உரிமையாளர் ஆகிவிடுகிறார் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு என்று அவர் கூறியுள்ளார். அதனால் முஸ்லிம்கள் தங்களுக்கு மசூதி கட்ட வேறு இடத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் பாஜக தங்களுக்கு ராஜிய சபாவில் பெரும்பான்மை கிடைத்தவுடன் இதற்கு சட்டம் இயற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

மசூதிகளை பொறுத்தவரை பலர் அதற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆனால் கோவிலுக்கு ராமர் மட்டுமே உரிமையாளர் என்று சுவாமி கூறியுள்ளார். அதனால் மசூதிகள் இடிக்கப்படவோ, அகற்றப்படவோ செய்யலாம் என்றும் ஆனால் கோவில்களை சிலைகளை வைத்த பிறகு தொடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று கூறிய அவர், தான் முன் வைத்தது போன்ற தர்க்க வாதத்தை இதுவரை எவரும் முன் வைத்ததில்லை என்று கூறியுள்ளார்..

Comments are closed.