மசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

0

மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து பதிலளிக்க, மத்திய அரசு, வக்பு வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த யாஷ்மீஜ் மற்றும் ஜூபைர் அகமது பீர்ஜாதே என்ற தம்பதி மசூதிகளில், எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாப்தே தலைமையிலான அமர்வு, சபரிமலை தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை விசாரணை நடத்துகிறோம் எனக்கூறி, இந்த மனு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு, மத்திய வக்பு வாரியம் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் வாரியத்திற்கு உத்தரவிட்டதுடன், மசூதியில் தொழுகை நடத்த சென்ற போது தடுத்தார்களா என அந்த தம்பதியிடம் கேள்வி எழுப்பியது. அப்போது வழக்கை தொடர்ந்த ஷூபைர் அகமது பீர்ஜாதே கூறுகையில், மசூதியில் தொழுகை நடத்த விரும்பும் பெண்களுக்கு உதவ வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை அளித்தோம். ஆனால், ஜமாத் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்தோம் எனக்கூறினர்.

Comments are closed.