மசூதிக்கு ஓட்டு கேட்டு சென்ற செல்லூர் ராஜு! விரட்டிய முஸ்லீம்கள்

0

மதுரை புதூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடித்து விட்டு வெளியே வரும் இஸ்லாமியர்களிடம், அதிமுக – பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் சென்றிருந்தனர்.

அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலை விட்டு வெளியேறும் இஸ்லாமியர்களிடம் துண்டு பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த இஸ்லாமியர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக பள்ளிவாசல் முன் வாக்கு சேகரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக தனியாக இருந்தால் தாராளமாக வாக்கு சேகரிக்கலாம் என்றும், இஸ்லாமியர்களின் எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு வாக்கு சேகரிக்க கூடாது எனவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுகவினர் வேறு வழியின்றி கலைந்து சென்றனர். அதிமுகவிலும் தமிழக முஸ்லிம்கள் அங்கம் வகிக்கும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் உட்கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு ஊர்களில் அதிமுகவை சேர்ந்த முஸ்லிம்கள் தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்துள்ளனர்.

Comments are closed.