மணிபூர் தேர்தலில் போட்டியிட இருக்கும் இரோம் ஷர்மிளா. விலை பேசிய பாஜக

0

மணிப்பூரில் ASFPA சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் ஷர்மிளா பின்னர் புதிய அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். (பார்க்க செய்தி). இந்நிலையில் வர இருக்கும் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் இரோம் ஷர்மிளா போட்டியிட வேண்டும் என்று பாஜக கேட்டுக்கொண்டதாகவும் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான 36 கோடி ஷர்மிளாவிடம் இல்லாத பட்சத்தில் பாஜக செலுத்தும் என்றும் கூறியதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இரோம் ஷர்மிளா, தன்னை பாஜகவினர் அணுகியதாகவும் பாஜக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட தன்னிடம் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர்களின் கருத்து தற்போதைய முதல்வர் இபோபியை எதிர்த்து தான் தேர்தலை சந்திக்க வேண்டுமென்றால்  தனக்கு 36 கோடி ரூபாய் தேவை என்றும் அது தன்னிடம் இருந்தால் தான் கொடுக்கலாம், இல்லை என்றால் பாஜக அவருக்காக வழங்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் தான் சுயேட்சையாக தேர்தலை சந்திக்கப்போவதாக தான் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கபோவதில்லை என்றும் தான் சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரோம் ஷர்மிளாவின் இந்த கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்த பாஜக வின் தேசிய செயலாளர் ராம் மாதவ், அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், மணிப்பூர் தேர்தலில் தங்களின் மொத்த செலவு கூட இவ்வளவு தொகை ஆகாது என்று கூறியுள்ளார். மேலும் இரோம் ஷர்மிளா தேர்தலில் போட்டியிட மரியாதையான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மணிப்பூரில் ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஒக்ரம் இபோபியை எதிர்த்து தௌபால் தொகுதியில் இரோம் ஷர்மிளா தேர்தலில் போட்டியிடுகிறார். தௌபால் இபோபி சிங்கின் சொந்த தொகுதியாகும்.

 

Comments are closed.