மண்ணை மலடாக்கும் ஹைட்ரோகார்பன்!

0

மண்ணை மலடாக்கும் ஹைட்ரோகார்பன்!

தமிழகத்தின் சோலைவனமாக உள்ள டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உறுதி எடுத்திருப்பதுபோல் தெரிகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் அபாயகரமானவையாகவே உள்ளன. மீத்தேன், ஷேல் கேஸ், பெட்ரோலிய எரிவாயு என்ற வரிசையில் தற்போது ஹைட்ரோகார்பன். மண்ணை மலடாக்கும் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் மக்களும் விவசாயிகளும் திரண்டு அதற்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அதனால் திட்டங்களை அறிவிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் தயங்கி நின்றன அரசுகள். போராட்டங்கள் ஓய்ந்து மக்கள் அமைதியாக இருக்கும் நேரத்தை பார்த்து மத்திய அரசு தமிழர்கள் மீதான தனது ‘தாக்குதல்’ ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ‘ஹைட்ரோகார்பன் வளங்களை கண்டறிதல் மற்றும் உரிமை வழங்குதல்’ என்ற கொள்கையை மத்திய அரசு 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. மீத்தேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய், பாறை எரிவாயு என அனைத்து வகையான ஹைட்ரோகார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பதே இக்கொள்கையின் நோக்கம் என வரையறுக்கப் பட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவோடு கார்பன் எனப்படும் கரி சேர்ந்தால் உருவாகும் பொருட்களே ஹைட்ரோகார்பன் என அழைக்கப்படுகின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.