மதசார்பற்ற இந்தியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும்: பாஜக எம்எல்ஏ

0

மதசார்பற்ற இந்தியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும்: பாஜக எம்எல்ஏ

கார்நாடக மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ பாசானகவ்டா படில் யட்நால், இந்தியாவில் உள்ள மதசார்பற்றவர்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

“நாம் நாடு, வேறெங்குமிருந்தும் சந்திக்கும் ஆபத்துகளை விட அறிவுஜீவிகளிடம் இருந்தும் மதசார்பற்றவர்களிடமிருந்தும் சந்திக்கும் ஆபத்து அதிகம். நான் உள்துறை அமைச்சராக இருந்தால் இவர்களை சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டிருப்பேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும் “இந்த மதசார்பற்றவர்கள் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டு நமது காற்றை சுவாசித்துக் கொண்டு நம் நீரை பருகி, நாம் செலுத்தும் வரியில் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர்” என்று கூறியுள்ளார். இவர் தனது இந்த கருத்துக்களை கார்கில் வெற்றி விழா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் மதசார்பற்றவர்களை தேச விரோதிகள் என்றும் இவர் அழைத்துள்ளார்.

இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் துணைத் தலைவர் K.E.ராதாகிர்ஷ்ணா, “இவர்கள் இப்படிதான் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் இவர்களுக்கு தேவையானதும் இது தான். இவரின் இந்த கருத்தை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது. இன்னும் பாஜக இவரின் இந்த கருத்துக்கு விளக்கமளித்து மதசார்பற்றவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பசானாகவ்டா, தனக்கு வாக்களிக்காத முஸ்லீம்கள் யாரும் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்க வேண்டாம் என்றும் அப்படி வரும் நபர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று தான் தனது பணியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது.

இவரது இந்த கூற்று பிரபல பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் பல தீவிர வலது சாரி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்துவரும் நிலையில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.