மதசார்பற்ற கட்சி என்ற பேரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது: ஒவைசி

0

மதசார்பற்ற கட்சி என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி தெரிவித்துள்ளார். அதேபோல் இனியும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகளை நம்பி பலனில்லை எனவும், பாஜகவை வீழத்துவதற்கு மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் தோற்றுவிட்டு, மதசார்பற்ற கட்சி என்ற பேரில் வயநாட்டு தொகுதியில் 45 சதவீத இஸ்லாமிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் என கூறினார்.

Comments are closed.