மதச்சார்பற்ற கட்சிகள் இனியாவது விழிப்புணர்வு பெறுமா?

0

மதச்சார்பற்ற கட்சிகள் இனியாவது விழிப்புணர்வு பெறுமா?

இரண்டு மாதங்கள் நீண்ட தேர்தல் நடைமுறை பூர்த்தியாகிவிட்டது. 17-வது மக்களவையின் காட்சி தெளிவாகிவிட்டது. நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகளும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதைத்தான் மே 23 அன்று வெளியான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் மதச்சார்பற்ற கட்சிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்பதற்கான எச்சரிக்கையையும் இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரபிரதேசம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நம்பிக்கையை ஊட்டுகிறது. நாட்டில் கல்வி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விழிப்புணர்வு பெற்ற மக்கள் வகுப்புவாதத்திற்கும், பிரிவினைவாத சிந்தனைகளுக்கும் எதிராக சிந்திக்கின்றார்கள் என்பது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு இந்த தேர்தலில் நல்லதொரு பாடத்தை அளித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸ் இந்த மாநிலங்களில் எடுத்த நிலைப்பாடு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு இந்த முயற்சி பெரும் வெற்றியையும் ஈட்டித் தந்துள்ளது. இந்த உத்தியை எதிர்காலத்தில் நாட்டின் இதர மாநிலங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

அவசரகோல கூட்டணிகளுக்கு பதிலாக கட்டமைக்கப்பட்ட முறையிலான கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னனி மாதிரியிலான கூட்டணிகளுக்கு இதர மாநிலங்களிலும் காங்கிரஸ் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இத்தகையதொரு கட்டமைக்கப்பட்ட கூட்டணியின் வெற்றியைத்தான் தமிழகத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. இணை அமைச்சரை கூட தோற்கடித்து தி.மு.க-. – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. இம்முறை டெல்லியில் தேர்தல் தேதியை அறிவித்த பிறகே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்தன. தேசிய அளவில் ஒரு கூட்டணி வாக்குகளை எண்ணுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரசுடன் எந்த வகையிலும் கூட்டணி அமைத்துக் கொள்ளமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் (சி.பி.எம்) மானத்தை தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிதான் காத்தது என்பது அக்கட்சிக்கு கிடைத்துள்ள ஒரு பாடமாகும். இந்த கூட்டணியில் சேராமலிருந்தால் வெறும் ஒரு சீட்டுடன் வரலாற்று ரீதியாக பெரும் தோல்வியை சி.பி.எம். சந்தித்திருக்கும். கடந்த தேர்தலில் முஸ்லிம் லீக்கை வம்புக்கு இழுத்த சி.பி.எம். இந்த தேர்தலில் முஸ்லிம் லீக்கை விட குறைவான தொகுதிகளை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

சிறிய கருத்து வேறுபாடுகளின் பெயரால் மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஏற்பட்ட பிரிவினையே பா.ஜ.க.விற்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. பிற மதத்தின் மீதான வெறுப்பை பரப்புரைச் செய்தும், இத்தனை ஆண்டுகளாக நாம் பெருமிதம் கொள்ளும் இந்தியாவின் சாதி, மத, மொழி, கலாச்சார பன்முகத்தன்மைகளை கூட வெறுப்பு பரப்புரையின் ஆயுதமாக கொண்டும் வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்தவனை தேசப்பற்றாளராக சித்தரித்த வேட்பாளரை கூட இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது இதற்கான தெளிவான ஆதாரமாகும். காந்தியின் சித்தாந்தத்தை தோல்வியடையச் செய்து காந்தியை கொலைச் செய்தவனின் மன நிலையை நாட்டில் வளர்த்தியெடுப்பதில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய அபாயமாகும்.

இம்முறை பா.ஜ.க. வெற்றி பெற்ற மாநிலங்களில் பொதுவான இதர சில சமச்சீரான நிலைமைகளை நாம் காணாததுபோல கடந்து சென்று விடக்கூடாது. தற்காலிகமான ஆதாயங்களுக்காகவும், மதச்சார்பற்ற கட்சிகளில் காணப்படும் சிறிய கருத்துவேறுபாடுகளின் பெயராலும் கடந்த காலங்களில் பா.ஜ.க.வுடன் கூட்டணிவைத்த கட்சிகளையோ, பா.ஜ.க.வுடன் ஒத்துழைத்த கட்சிகளையோ இம்முறை மக்கள் நம்பவில்லை என்பதை காணமுடியும்.

இம்முறை பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்த ஆந்திர பிரதேசத்தின் தெலுங்குதேசத்திற்கும், மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரசுக்கும், தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.இ.அ.தி.மு.கவுக்கும் இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தில் இரண்டு சீட்டுகளிலிருந்து பா.ஜ.க. இரட்டை இலக்கத்தை தொட்டுள்ளது. முன்னர் காங்கிரஸை எதிர்ப்பதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி அல்ல என்ற மனநிலை உருவாக்கப்பட்டது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.