மதத்தின் பெயரால் இந்தியாவை பிரித்த முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்: பாஜக தலைவர் வினை கட்டியார்

0

இந்தியாவை மதத்தின் பெயரால் பிரித்துள்ள முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாஜக தலைவர் வினை கட்டியார் கூறியுள்ளார். “முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது. அவர்கள் இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரித்தனர். அவர்கள் இந்த நாட்டில் வாழ வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் பங்களாதேஷிற்கோ பாகிஸ்தானிற்கோ செல்ல வேண்டும். அவர்களுக்கு இங்கு என்ன வேலை?” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் வந்தேமாதரம் மற்றும் தேசிய கொடியை மதிக்காதவர்களை தண்டிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வினை கட்டியார் தெரிவித்துள்ளார். “வந்தே மாதரத்தை மதிக்காதவர்கள், தேசிய கொடியை அவமதிப்பவர்கள், ஆகியோரை தண்டிக சட்டம் வேண்டும். பாகிஸ்தான் கொடியை ஏற்றுபவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று கட்டியார் கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்து இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று கூறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று AIMIM கட்சி தலைவர் உவைசி கூறியதை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply