மதத்தை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டதாலே பாஜக வென்றது: முதல்வர் நாராயணசாமி!

0

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: “நாட்டிலேயே 3வது மிகப்பெரிய கட்சியாக உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது. அரசியல் நாகரிகம் கருதி மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என கூறினார்”.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் வெற்றி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “புல்வாமா தாக்குதல் மற்றும் மதங்களை முன்வைத்து அவர்கள் பிரசாரம் மேற்கொண்டதன் பலனாகதான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்” என நாராயணசாமி கூறியுள்ளார்.

Comments are closed.