மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை- புதுக்கோட்டை ஹோட்டலில் பலகை..!

0

இந்து மதத்தில் இல்லாதவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேசமயம் உணவிற்கு மதமில்லை என Zomato நிறுவனம் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் மூன்று இடங்களில் உணவகம் மற்றும் காபி நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அருண்மொழி. அவர் உணவகம் மற்றும் காபி பாரில் மதம் பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை என்று பலகை வைத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவரது முகநூலிலும் பதிவிட்டுள்ள அருண்மொழி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு என்றும் அதில் மதம் பார்ப்பது என்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அதை கண்டிக்கும் வகையிலேயே தனது உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை பலகை வைத்துள்ளார்.

 

Comments are closed.