புதுடெல்லி: மதம் மாறிய தலித்துகளுக்கு முந்தைய சாதியின் சலுகைகளை வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சாதிக்கட்டமைப்பும், தீண்டாமையும் இந்துமதம் மட்டுமே
அங்கீகரித்துள்ளது.ஆகையால் அட்டவணை சாதிகள் என்ற தனியாக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும்.மதம் மாறிய அட்டவணை சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் மத்திய அரசு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும்.நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வரும் தலித்-பழங்குடியின மக்களுக்கு நஷ்ட ஈடாகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.மதம்
மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால், அது எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை கடுமையாக பாதிக்கும்.சாதியை அங்கீகரிக்காத இஸ்லாம்-கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்களுக்கு சாதியை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவது சரியல்ல.ஒ.பி.சி பிரிவுகளுக்கு மாறிய தலித்துகளுக்கு அங்கே ஒ.பி.சி இட
ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.