மதுரை:உணவு விடுதி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் உட்பட 5 பேர் கைது

0

மதுரை அரசரடியில் உணவு விடுதி நடத்தி வரும் சீனிவாசன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு கும்பல் உணவு விடுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன என்றும், இதன்பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க 1 இலட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த சீனிவாசன் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

காவல்துறையினரின் அறிவுரையின் படி பணம் கொடுப்பதற்காக காளவாசல் சிக்னல் அருகே சீனிவாசன் சென்ற போது, பணம் வாங்குவதற்காக வந்த அந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வந்தவர்கள் வாலந்தூரை சேர்ந்த பிரேம், செல்லம்பட்டியை சேர்ந்த குபேந்திரண், விக்கிரமங்கலத்தை சேர்ந்த மகாமணி, ஏட்டு ஞானசேகரன் என்பது தெரியவந்தது. இதில் பிரேம் பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Comments are closed.