மதுரை காவல்துறை ஆய்வாளர் சேதுமணி மாதவனுக்கு 10 வருடம் சிறை தண்டனை.

0

2007 ல் தஞ்சை காவல்துறை ஆய்வாளராக பணியாற்றிய இவர் அகிலா எனும் ஒரு மென்பொருள் பொறியாளரை டெம்பிள் டவர் ஓட்டலில் சட்டவிரோதமாக சிறைவைத்து பல நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்தார் என்றும் அப்பெண்னின் வீட்டாரிடம் பல லட்சங்களை மிரட்டி பிடுங்கியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அகிலா மற்றும் மேலும் இருவர் மீது தஞ்சாவூர் காவேரி நகரை சேர்ந்த ரவிராஜ் என்பவர் தனக்கு அவர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டனர் என்று புகாரளித்தார். இந்த புகாரை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் சேதுமணி மாதவன் அகிலாவை தனியார் விடுதியில் அடைத்து வைத்து விசாரணை என்கிற பெயரில் பாலியல் தொந்தரவுகளை கொடுத்ததாகத் தெரிகிறது. இதில் பாதிக்கபட்ட அகிலா தனக்கு ஏற்படும் கொடுமைகளை தாங்க இயலாத நிலையில் தான் சிறைவைக்கப்பட்ட விடுதியிலேயே 19-1-2007 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முதலில் சந்தேக மரணம் என்றும் வழக்கு பதிவு செய்த காவல்துறை அடுத்தடுத்து நடந்த விசாரணைகளின் முடிவில் சேதுமணி மாதவனை முதல் குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்த்தனர். மேலும் இவ்வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக பாலு என்கின்ற பாலசுப்ரமணியம், மற்றும் கணேசன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இவர்கள் மீது இந்திய 343, 354, 409 மற்றும் 120B ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இவர் மீது வழக்கு தொடரப்பட்டு சுமார் பத்து வருடங்கள் கழிந்த நிலையில் அவருக்கான தீர்ப்பை தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதில் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக இவருக்கு மொத்தம் 10 வருடங்கள் சிறை தண்டனையும் 2500 ரூபாய் அபராதமும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.