மது அருந்துவிட்டு கையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்.எல்.ஏ!

0

உத்திரகாண்ட் மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ. பிரணவ் சிங், பத்திரிக்கையாளர்களை மிரட்டி, தாக்க முயன்றதால், கடந்த மாதம் கட்சித் தலைமையால், 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது காலில் அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பிரணவ் சிங், ஆதரவாளர்களுடன் தான் சிசிச்சை பலன் பெற்று மீண்டு வந்ததை மது அருந்தி கொண்டாடியுள்ளார்.

இந்த கொண்டாட்டத்தின் போது, கைகளில் துப்பாக்கியுடன் கடுத்துவிட்டு குத்தாட்டம் போட்டுள்ளார். அதை அந்த கொண்டாட்டத்தில் பங்குபெற்ற பிரணவ் சிங்கின் ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments are closed.