மத்திய அரசின் அடுத்த குறி RBI

0

மத்திய அரசின் அடுத்த குறி RBI

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா அக்டோபர் 26 அன்று மும்பையில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். தனது உரையில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் குறித்தும், ரிசர்வ் வங்கியின் சுயாட்சி மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளில் மத்திய பாஜக அரசின் எல்லை கடந்த குறுக்கீடுகள் குறித்தும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டு நாட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், அனுகுமுறைகள், உலக அளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, இயற்கை சீற்றம், போர் அல்லது வேறு ஏதேனும் எதிர்பாராத பேரிடரினால் பொருளாதாரத்தில் ஏற்படும் சரிவுகளை சமாளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையினை இருப்பாக வைத்திருப்பது நடைமுறை. தற்சமயம் ரிசர்வ் வங்கியிடம் இருப்பாக உள்ள தொகை சுமார் 9.63 இலட்சம் கோடி. அதில் மூன்றில் ஒரு பங்கான 3.6 இலட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாக செய்திகள் வெளியானது. மேலும் மத்திய அரசு தனது முடிவுகளை சுயாட்சி உரிமை கொண்ட ரிசர்வ் வங்கியின் மீது திணிக்க வகைசெய்யும் ரிசர்வ் வங்கி தொடர்பான சட்டத்தின் பிரிவு 7-யை அமுல்படுத்த இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் இதைவிட மோசமான சூழல் நிலவிய போதும் இந்த சட்டபிரிவு பயன்படுத்தப்பட்டது இல்லை.

இதை ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய பாஜக அரசிற்கு இடையிலான மோதலாக சில ஊடகங்கள் முன்னிறுத்தின. #RBIvsGOI போன்ற ஹேஷ்டேக்களும் பரவலாக்கப்பட்டன. ஆனால் அறிகுறிகளை கானும் பொழுது, இது ஏதோ இரண்டு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் என்று கடந்து சென்றுவிட முடியாது. மாறாக, நாட்டின் பொருளாதார நிலை எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தை குறிப்பதாக உள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.