மத்திய அரசு நீதித்துறையை அழிக்க நினைக்கிறது: உச்ச நீதிமன்றம்

0

மத்திய அரசு நீதிபதிகள் காலியிடத்தை நிரப்புவதுதான் தங்களின் முன்னுரிமை என்று கூறியதை நிறைவேற்றுவதில் தவறியுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறியுள்ளார். சரியாக நீதிபதிகளை நியமிக்காமலும் நீதிமன்றங்களை ஒட்டுமொத்தமாக மூடியும் நீதித்துறைக்கு மத்திய அரசு தடை ஏற்படுத்தி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளது.

“கர்நாடகா உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு முழு தளமே நீதிபதிகள் இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. முன்னாட்களில் நீதிபதிகள் அதிகம் இருந்து நீதிமன்றங்கள் இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றங்கள் இருக்கின்றன, ஆனால் நீதிபதிகள் இல்லை.” என்று தலைமை நீதிபதி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீங்கள் மொத்த நீதிமன்ற வளாகத்தை மூடிவிட்டு நீதிபதிகளை வெளியேற்றி விடலாம்” என்று அவர் கோபத்தில் கூறியுள்ளார். NJAC  சட்டம் நீக்கப்பட்டு நீதிமன்ற நியமத்திற்கு புதிய  செயல்முறையை நிறுவக்கோரி ஒன்பது மாதங்களாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒன்பது மாதங்களாக உங்களிடம் கொலிஜியம் கொடுத்த பெயர்களும் உங்களிடமே அடைபட்டுக் கிடக்கின்றது. அந்த பெயர்களை வைத்துக்கொண்டு நீங்கள் எதற்காக பொறுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுபியுள்ளார்.

Comments are closed.